
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் நட்ப்பு சம்பியன் ராயல் சேர்லஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. இதில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து அசத்தியுள்ள ஆர்சிபி அணியின் தொடர் வெற்றிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பிளேயிங் லெவன்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வயட்-ஹாட்ஜ், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ், ரக்வி பிஸ்ட், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், ஏக்தா பிஷ்ட், ஜோஷிதா விஜே, ரேணுகா சிங் தாக்கூர்
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ஹீலி மேத்யூஸ், யஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர்(கேப்டன்), அமெலியா கெர், சஜீவன் சாஜனா, ஜி கமலினி, அமன்ஜோத் கவுர், சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், பருனிகா சிசோடியா.