
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் அதே ஆதிக்கத்தை டெல்லி அணி இப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் முதல் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
யுபி வாரியர்ஸ்: கிரண் நவ்கிரே, விருந்தா தினேஷ், தீப்தி சர்மா, தஹ்லியா மெக்ராத், ஸ்வேதா செஹ்ராவத், கிரேஸ் ஹாரிஸ், சினெல்லே ஹென்றி, சோஃபி எக்லெஸ்டோன், உமா சேத்ரி, கிராந்தி கவுட், சைமா தாக்கூர்
டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஷஃபாலி வர்மா, மெக் லெனிங்(கே), ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், மரிஸான் கேப், ஜெஸ் ஜோனாசன், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, நிகி பிரசாத்.