ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Thu, Oct 27 2022 22:04 IST
Image Source: Google

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதில் ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி வலிமை வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் பால் ஸ்டிர்லிங், பால்பிர்னி, டக்கர், டெக்கர் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

மேலும் பந்துவீச்சில் ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஃபின் ஹேண்ட், மார்க் அதிர், கரேத் டெலானி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பக்கபலமாக உள்ளது.

அதேசமயம் முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி முதல் போட்டியில் இங்கிலாந்துடன் அடைந்த தோல்விக்கு பிறகு, வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இப்போட்டியில் களமிறங்குகிறது.

அந்த அணியின் பேட்டிங் ஆர்டரில் ஸஸாய், ஸத்ரான், குர்பாஸ், நபி ஆகியோரும், பந்துவீச்சில் ஃபரூக்கி, ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோரும் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து 
  • இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - காலை 9.30 மணி (இந்திய நேரப்படி)

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 23
  • ஆஃப்கானிஸ்தான் - 16
  • அயர்லாந்து - 06
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், உஸ்மான் கனி, நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கே), அஸ்மதுல்லா ஒமர்சாய், ரஷித் கான், முஜீப், ஃபரீத் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஃபியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில்

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்: லோர்கன் டக்கர்
  • பேட்டர்: ஆண்டி பால்பிர்னி, உஸ்மான் கானி, நஜிபுல்லா ஸத்ரன், ஹஸ்ரதுல்லா ஸஸாய்
  • ஆல்-ரவுண்டர்கள்: கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, அஸ்மதுல்லா ஓமர்சாய்
  • பந்துவீச்சாளர்: ரஷித் கான், ஃபரூக்கி, ஜோஷ் லிட்டில்.

*. This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை