NZ vs WI, 4th T20I, Cricket Tips: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று டி20 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. 

Advertisement

இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இப்போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றியைப் பதிவு செய்து தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

NZ vs WI: Match Details

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - சாக்ஸ்டன் ஓவல், நெல்சன்
  • நேரம் - அதிகாலை 5.45 மணி

NZ vs WI: Live Streaming Details

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வர்க்கில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஆன்லைனியில் பார்க்க விரும்பு ரசிகர்கள் அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம். 

NZ vs WI: Head-to-Head in T20Is

  • Total Matches: 23
  • New Zealand: 13
  • West Indies: 08
  • No Result: 02
  • Tied: 00

NZ vs WI: Ground Pitch Report

நியூசிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி நெல்சனில் நடைபெறவுள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பேட்டிங்கைத் தேர்வு செய்யவே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 10 டி20 போட்டிகள் நடந்துள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 08 போட்டிகளிலும், 02 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

NZ vs WI: Possible XIs

New Zealand: மிட்செல் சாண்ட்னர் ©, டிம் ராபின்சன், டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், கைல் ஜேமிசன், இஷ் சோதி, ஜகரி ஃபோல்க்ஸ், ஜேக்கப் டஃபி

Advertisement

West Indies: ஷாய் ஹோப்©, பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், அக்கீம் அகஸ்டே, ரோவ்மேன் பவல், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேடன் சீல்ஸ், அகேல் ஹோசின், மேத்யூ ஃபோர்டே

NZ vs WI: Player to Watch Out For

Probable Best Batter

கடந்த ஆட்டத்தில் டெவன் கான்வே அரைசதம் கடந்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை, கேப்டன் ஷாய் ஹோப் பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிப்பார்.

Advertisement

Probable Best Bowler

ஜேக்கப் டஃபி மூன்று ஆட்டங்களிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை, மேத்யூ ஃபோர்டு பந்து வீச்சில் நல்ல ஃபார்மில் உள்ளார். 

Today Match Prediction: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

NZ vs WI 4th T20I, Today Match NZ vs WI, NZ vs WI Prediction, NZ vs WI Predicted XIs, Injury Update of the match between New Zealand vs England

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News