ஆசிய கோப்பை 2022: இந்தியா vs ஹாங்காங் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Aug 30 2022 22:17 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஹாங்காக்
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம், தூபய்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. அதிலும் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதேபோல் பந்துவீச்சிலும் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனார். இருந்தாலும் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், தீபக் ஹூடா ஆகியோர் பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதேசமயம் நிசாகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணியும் சமீப காலமாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் கேப்டன் நிசாகத் கான் இந்த ஆண்டில் 8 இன்னிங்ஸ்களில் 249 ரன்கலையும், பாபர் ஹயாத் இந்த ஆண்டில் இரண்டு அரைசதங்களுடன் 217 ரன்களை எடுத்துள்ளார்.

பந்துவீச்சில் எஸன் கான், ஐஸஸ் கான், முகமது கஸான்ஃபர் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு அணிகளும் நேருக்கு நேர் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

உத்தேச அணி 

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

ஹாங்காங் - யாசிம் முர்தாசா, நிஜாகத் கான் (கே), பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி, ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், முகமது கசன்ஃபர், ஆயுஷ் சுக்லா.

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக், ஸ்காட் மெக்கெக்னி
  •      பேட்டர்ஸ் - விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாபர் ஹயாத்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, அய்சாஸ் கான்
  •      பந்துவீச்சாளர்கள் - புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், எஹ்சான் கான், முகமது கசன்ஃபர்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை