AUS vs ZIM, 2nd ODI: ஸ்டார்க், ஸாம்பா அபாரம்; தொடரை வென்றது ஆஸி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவ்ருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் இன்னசெண்ட் கையா, மருமணி, சீன் வில்லியம்ஸ் ஆகியோர் மிட்செல் ஸ்டார்க்கின் அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை விக்கெட் இழப்பை தடுக்க முயற்சித்தனர். ஆனால் வில்லியம்ஸ் 29 ரன்களிலும், ரஸா 17 ரன்களோடும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் வந்த வீரர்களாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 27.5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 1, டேவிட் வார்னர் 13 ரன்களோடு ரிச்சர்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - அலெக்ஸ் கேரி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 14.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வென்றது.