இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அந்தவகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். 

Advertisement

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ் குமார் ரெட்டியும், ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவனும் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரிவுடன் 8 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

மேற்கொண்டு அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இணை விக்கெட் இழப்பை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 37 ரன்களைச் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களுடனும், அக்ஸர் படேல் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட், ஸ்டார்க், எல்லிஸ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். 

இந்த நிலையில் இப்போட்டியில் விராட் கோலி விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, மிட்செல் ஸ்டார்க் வீசிய இன்னிங்ஸின் 7ஆவது ஓவரின் முதல் பந்தை விராட் கோலி அவுட் சைட் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்ததை விட வேகமாக இருந்ததன் காரணமாக அது பேட்டில் எட்ஜ்ஜாகி செல்ல, கூப்பர் கனொலி அபாரமான கேட்சைப் பிடித்து அசத்தினார். இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார்.

இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்

ஆஸ்திரேலியா அணி பிளேயிங் லெவன்: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் பிலிப், மேட் ரென்ஷா, கூப்பர் கோனொலி, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்

Also Read: LIVE Cricket Score
Advertisement

 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News