மகளிர் உலகக்கோப்பை 2022: ஆஸ்திரேலியாவிடம் போராடி இந்தியா தோல்வி!

Updated: Sat, Mar 19 2022 14:27 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலி ராஜ் 68 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்னஸ் - அலிசா ஹீலி இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இதில் ஹெய்னஸ் 43 ரன்களில் ஆட்டமிழக்க, அலிசா ஹீலி அரைசதம் கடந்தனார். அதன்பின் அவருடன் இணைந்த கேப்டன் மெக் லெனிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

பின் 72 ரன்னில் அலிசா ஹீலி ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இருப்பினும் 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை அடைந்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு மகளிர் உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி ஆஸ்திரேலிய அணி சாதனைப் படைத்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை