IN-W vs AU-W, Match 13, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து, அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

IN-W vs AU-W: Match Details

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம் - ஏ.சி.ஏ கிரிக்கெட் மைதானம், கொழும்பு
  • நேரம்- அக்டோபர் 12, மதியம் 3.0 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs AU-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IN-W vs AU-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 59
  • India Women: 11
  • Australia Women: 48
  • No Result: 00

IN-W vs AU-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 16 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 11 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 233 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 387 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IN-W vs AU-W: Possible XIs

India Women: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர், சினே ராணா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட்

Advertisement

Australia Women: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, அலிசா ஹீலி (கேப்டன் ), எலிஸ் பெர்ரி, அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், டார்சி பிரவுன்

IN-W vs AU-W: Player to Watch Out For

Probable Best Batter

ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறப்பாக இன்னிங்ஸ் தேவை. பெத் மூனி பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல ஃபார்மில் உள்ளார்.

Advertisement

Probable Best Bowler

கிராந்தி கவுட் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டார், புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிம் கார்த் ஆஸ்திரேலியாவுக்காக இதேபோன்ற பங்கைக் கொண்டுள்ளார், மேலும் அவர் அவர்களுக்கு ஆரம்பகால திருப்புமுனைகளை வழங்கியுள்ளார்.

Today Match Prediction: ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. 

Also Read: LIVE Cricket Score
Advertisement

IN-W vs AU-W Prediction Match 13, ICC Womens World Cup 2025, Today Match IN-W vs AU-W, IN-W vs AU-W Prediction, IN-W vs AU-W Predicted XIs, Injury Update of the match between India Women vs Australia Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News