ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Oct 08 2022 21:40 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளூம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் அதன் ஒருபகுதியாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
  • இடம் - பெர்த் மைதானம், பெர்த்
  • நேர்ம் - மதியம் 1.40 மணி

போட்டி முன்னோட்டம்

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்திருந்தாலும், வெஸ்ட் இண்டீஸுடனான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதேசமயம் டேவிட் வார்னர், மேத்யூ வேட், டிம் டேவிட், காமரூன் க்ரீன் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் சிறந்த விளங்கி வருகின்றன. அவர்களும் மேக்ஸ்வெல், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் அந்த அணியை வீழ்த்து பெரும் சிரமமாகும்.

மேலும் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸ், ஆடாம் ஸாம்பா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் வெற்றிக்கு ஏதுவாக அமைந்துள்ளது.

அதேசமயம் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியையும் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக விலகிய நிலையிலும், மொயின் அலி தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அசத்தியது.

அதிலும் நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் டேவிட் மாலன், பில் சால்ட், ஹாரி ப்ரூக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் இருப்பது அணியின் பலத்தை பண்மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் பந்துவீச்சில் மார்க் வுட், ஆதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 20
  • இங்கிலாந்து - 09
  • ஆஸ்திரேலியா - 10
  • முடிவில்லை - 1

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜோஸ் பட்லர் (கே), பில் சால்ட்/அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், ஹாரி ப்ரூக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ரீஸ் டாப்லி, அடில் ரஷித், மார்க் வூட்.
    
ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், ஆரோன் பின்ச் (கே), கிளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - ஜாஸ் பட்லர், மேத்யூ வேட்
  •      பேட்டர்ஸ் - ஹாரி ப்ரூக்ஸ், டேவிட் வார்னர், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட்
  •      ஆல்-ரவுண்டர்கள் - மொயின் அலி, கிளென் மேக்ஸ்வெல்
  •      பந்துவீச்சாளர்கள் - ரீஸ் டாப்லி, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை