வங்கதேசம் vs ஜிம்பாப்வே, சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 ஆட்டங்கள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்புகளை அதிகரித்து வருகின்றன. இதில் நாளை குரூப் 2 அணிகளுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் காலை 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக ஜிம்பாப்வே அணியின் ஆட்டம் ரசிகர்களை பிரமிக்கவைக்கும் வகையில் இருந்துள்ளது.
அதிலும் சிக்கந்தர் ரஸா பேட்டிங், பவுலிங் என இருபிரிவிலும் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். அவருடன் வெஸ்லி மதவெரே, கிரேய்க் எர்வின், ரியான் பர்ல் ஆகியோரும் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் வங்கதேச அணி சமீப காலங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் என நட்சத்திர அணிகளை வீழ்த்தியிருந்தாலும், டி20 உலகக்கோப்பை தொடரில் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிவருகிறது.
அந்த அணி பந்துவீச்சில் எதிரணியை கட்டுப்படுத்தினாலும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இதனால் அந்த அணி அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடி வெற்றிபெற வேண்டிய சூழலில் உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேசம் vs ஜிம்பாப்வே
- இடம் - கபா கிரிக்கெட் மைதானம், பிரிஸ்பேன்
- நேரம் - காலை 8.30 மணி (இந்திய நேரப்படி)
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 19
- வங்கதேசம் - 12
- ஜிம்பாப்வே - 07
உத்தேச அணி
ஜிம்பாப்வே: வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சாகப்வா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், ரிச்சர்ட் நகரவா, ஆசிர்வாதம் முசரபானி.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன்(கே), அபிஃப் ஹொசைன், யாசிர் அலி, நூருல் ஹசன், மொசாடெக் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்: ரெஜிஸ் சகப்வா
- பேட்டிங்: அஃபிஃப் ஹொசைன், லிட்டன் தாஸ், கிரேக் எர்வின்
- ஆல்-ரவுண்டர்: ஷகிப் அல் ஹசன், சிக்கந்தர் ராசா, வெஸ்லி மாதேவரே
- பந்துவீச்சு: தஸ்கின் அகமது, பிராட் எவன்ஸ், பிளஸ்ஸிங் முசரபானி, ஹசன் மஹ்மூத்