இந்திய அணி பயிற்சியாளர்கள்; விண்ணப்பத்தை அறிவித்த பிசிசிஐ!
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. அதற்காக ராகுல் டிராவிட்டுடன் பேசி அவரது ஒப்புதலை பிசிசிஐ பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் அவரவர் வகித்துவரும் பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டும் அவரது பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
இந்நிலையில், பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மற்ற பயிற்சியாளர்கள் பதவிக்கு நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதை போல, பராஸ் மாம்ப்ரே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.