ENG vs NZ: காயம் காரணமாக முக்கிய நியூ வீரர் விலகல்!
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறுது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து வீரர் காலின் டி கிராண்ட்ஹோம் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 3ஆவது நாள் ஆட்டத்தில் பந்து வீசும் போது காயமடைந்தார். அதனால் அவரால் பந்து வீச முடியவில்லை. அதன் காரணமாக அவர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது இவர் மட்டுமே 42 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் மைக்கெல் ப்ரேஸ்வெல் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “தொடரின் ஆரம்பித்திலேயே இப்படி காயம் ஏற்படுவதற்கு காலின் டி கிராண்ட்ஹோம்க்கு அவமானம். அவருடைய பங்கு டெஸ்ட் அணியில் மிகவும் பெரியது. நாங்கள் நிச்சயமாக அவரை மிஸ் செய்கிறோம். மைக்கெல் ப்ரேஸ்வெல் அடுத்து இவருக்கு பதிலாக ஆடுவார். அவர் குணமாக 10 முதல் 12 வாரங்கள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.