6 மாதங்களுக்கு பிறகு பந்துவீசியது பதற்றமாக இருந்தது - தீபக் சஹார்!

Updated: Thu, Aug 18 2022 22:41 IST
Image Source: Google

இந்திய அணி ஜிமபாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விலையாடி வருகிறது. இதில் முதல் போட்டி ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில்லும், ஷிகர் தவானும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.  மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த கூட்டணி 30.5 ஓவரில் இலக்கையும் அடைந்து இந்திய அணிக்கு வெற்றியையும் பெற்று கொடுத்துள்ளது. ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர், இந்த போட்டிக்கான ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய தீபக் சாஹர், “6 மாத கால ஓய்விற்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதால் இந்த போட்டியில் சற்று பதற்றமாக இருந்தது. போட்டியின் துவக்கத்தில் கூடுதல் பதற்றத்துடனே பந்துவீசினேன். என்னால் சில பவுன்சர் பந்துகளை சரியாக வீச கூட முடியாமல் சற்று தடுமாறினேன். நீண்ட ஓய்விற்கு பிறகு இந்திய அணிக்காக விளையாடுவது சாதரண விசயம் கிடையாது, அதிக பதற்றம் பயமும் இருக்கும். 

காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டிக்கு முன்பு நான் நான்கு பயிற்சி போட்டிகளில் விளையாடியிருந்தாலும், இந்திய அணிக்காக விளையாடுவது முற்றிலும் மாறுபட்டது. அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை