மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் - காணொளி!
மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
மேற்கொண்டு இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் 6ஆம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் அசத்திய மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மிட்செல் மார்ஷ் விளாசிய சிக்ஸர் ஒன்று ரசிகர்களை பிரம்மிப்பில் அழ்த்தியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை தீபக் சஹார் வீசிய நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தையே மிட்செல் மார்ஷ் மைதானத்தின் மேற்கூறைக்கு மேல் சிக்ஸர் விளாசி மிராட்டினார். இந்நிலையில் மிட்செல் மார்ஷின் இந்த அபாரமான சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்திலும் வைரலாகி வருகிறது.
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் ரியான் ரிக்கெல்டன் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களைச் சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆயூஷ் பதோனி 35 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.