தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்!

Updated: Sat, Jun 18 2022 11:47 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 87 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் பவுமா ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகியிருந்தாா்.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸில் தடுமாற்றத்தில் இருந்தபோது ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் கூட்டணி அசத்தலாக விளையாடி ஸ்கோரை உயா்த்தியது. தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பாண்டியா 46 ரன்கள் எடுத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

சர்வதேச டி20 ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வென்ற மூத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். 37 வயதில் ஆட்ட நாயகன் விருதை வென்ற தினேஷ் கார்த்திக், இந்த விருதை வென்ற முதல் 35+ இந்திய வீரர் ஆகிறார். 

இதற்கு முன்பு 2021-ல் ரோஹித் சர்மா, 34 வருடங்கள், 216 நாள்களில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருடைய சாதனையை தினேஷ் கார்த்திக் முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய இரு சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

சர்வதேச டி20: 6ஆம் நிலை மற்றும் கீழ்வரிசை இந்திய பேட்டர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்

  • 55 - தினேஷ் கார்த்திக் v தென் ஆப்பிரிக்கா, 2022
  • 52* - தோனி v தென் ஆப்பிரிக்கா, 2018
  • 50* - மனிஷ் பாண்டே v நியூசியூசிலாந்து, 2020
  • 49 - தோனி v நியூசி., 2017
  • 48* - தோனி v ஆஸி., 2012

சர்வதேச டி20யில் 50+ ரன்கள் எடுத்த மூத்த இந்திய வீரர்கள்

  • 37 வருடங்கள் 16 நாள்கள் - தினேஷ் கார்த்திக் v தென் ஆப்பிரிக்கா, 2022
  • 36 வருடங்கள்  229 நாள்கள் - தோனி v தென் ஆப்பிரிக்கா, 2018
  • 35 வருடங்கள் 1 நாள் - ஷிகர் தவன் v ஆஸ்திரேலியா, 2020
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை