Ambati Rayudu's All-Time IPL XI: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார். 

Advertisement

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. மேலும் ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையையும் வென்று ஆர்சிபி அணி தங்கள் மீதான இழுக்கையும் போக்கியது. அதேசமயம் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 

Advertisement

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்துள்ளார். அவர் தனது அணியில் தொடக்க வீரராக 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல் மற்றும் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கெய்ல் இதுவரை ஐபிஎல்லில் 6 சதங்கள் மற்றும் 357 சிக்ஸர்களை அடித்துள்ளார், அதே நேரத்தில் ரோஹித் தனது பெயரில் 5 சதங்களை விளாசியுள்ளர்.

மேற்கொண்டு மூன்றாவது இடத்தில், ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த வீரரான விராட் கோலியைத் தேர்வு செய்துள்ள அவர், நான்காம் இடத்தில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். இதன் கரணமாக மிஸ்டர் ஐபிஎல் என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மற்றும் மிஸ்டர் 360 வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரை தனது அணியின் மிடில் ஆர்டர் வீரராக அவர் மாற்றியுள்ளார். அதன்பின் அணியின் விக்கெட் கீப்பராக எம் எஸ் தோனியைத் தேர்வு செய்துள்ளார். 

அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் 5 கோப்பையை வென்றுள்ள தோனியை தமது அணியின் கேப்டனாகவும் அவர் நிமியத்துள்ளார். அவரைத் தொடர்ந்து கீரன் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைனை தனது அணியின் ஆல் ரவுண்டராக தேர்வு செய்துள்ளார். இதில் பொல்லார்ட் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும், சுனில் நரைன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டராகவும் அணியில் சேர்த்துள்ளார்.

மேற்கொண்டு தனது அணியின் சுழற்பந்து வீச்சாளராக ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கானை தேர்வு செய்திருக்கும் அவர், அணியின் வேகப்பந்து வீச்சாளராக லசித் மலிங்கா மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோவை அவர் தனது அணியின் இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

அம்பதி ராயுடுவின் ஆல் டைம் ஐபிஎல் லெவன்: கிறிஸ் கெய்ல், ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சுரேஷ் ரெய்னா, ஏபி டி வில்லியர்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரஷித் கான், சுனில் நரைன், ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா. இம்பேக்ட் வீரர்: டுவைன் பிராவோ.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News