இந்தியா - இங்கிலாந்து ஒருகிணைந்த லெவனை தேர்வு செய்த புஜாரா!

Updated: Sat, Jul 19 2025 22:52 IST
Image Source: Google

Cheteshwar Pujara Picks India England Test XI: இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஷ்வர் புஜாரா தனது ஒருங்கிணைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் லெவன் அணியைத் தேர்வு செய்து அறிவித்துள்ளார். 

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர் 

இந்நிலையில் இந்தியா அணி வீரர் சட்டேஷ்வர் புஜாரா ஒருகிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.  புஜாரா தேர்வு செய்துள்ள இந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காதது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அலெக்ஸ்டர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து ஜாம்பவான்களையும் அவர் புறக்கணித்துள்ளார்.

புஜ்ரா தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை ஆஅகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் அலெக் ஸ்டீவர்ட், 133 டெஸ்ட் போட்டிகளில் 8,463 ரன்களையும், ராகுல் டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும் அடித்துள்ளனர். மேற்கொண்டு அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக ஜோ ரூட், விராட் கோலி மற்றும் விவிஎஸ் லக்ஷமன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

இதில் ஜோ ரூட் (13,259 ரன்கள், 37 சதங்கள்) தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறார். அதேசமயம் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 9230 ரன்களைச் சேர்த்துள்ளார். மறுபக்கம் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் 17 சதங்களுடன் 8,781 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து ஆல் ரவுண்டர்களாக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோரை தேர்வு செய்த புஜாரா, அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் ஜஸ்இரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த அணியின் 12ஆவது வீரராக முன்னாள் இங்கிலாந்து வீரர் மேத்யூ ஹோகார்டை தேர்வுசெய்துள்ளார்.

புஜாரா தேர்வு செய்த் ஒருங்கிணைந்த இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் லெவன்

Also Read: LIVE Cricket Score

அலெக் ஸ்டீவர்ட், ராகுல் டிராவிட், ஜோ ரூட், விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன், பென் ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, (12ஆவது வீரர்: மேத்யூ ஹோகார்ட்)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை