ஐபிஎல் 2021 : இலங்கை வீரர்களுக்கு தேடி வரும் அதிர்ஷ்டம் !

Updated: Mon, Jun 28 2021 09:33 IST
Image Source: Google

நடப்பாண்டு பயோ பபுள் சூழலில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கியது. மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், வீரர்களுக்கு தொற்று உறுதியானது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியது. 

இதனால நடப்பாண்டு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்தது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.

ஆனால் சர்வதேச போட்டிகள் மற்றும் கரோனா வைரஸ் தொற்று, டி20 உலக கோப்பைக்கு தயாராகுதல் போன்ற காரணத்தினால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஜூலை 13ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இலங்கை வீரர்கள் சில ஐபிஎல் கிரிக்கெட்டில் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை வீரர்கள் சமீப ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அளவில் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு வேகப்பந்து வீச்சாளர் உதானா இடம் பிடித்திருந்தார். சிறப்பாக பந்து வீசினாலும், ரன்கள் அதிக அளவில் விட்டுக்கொடுத்தார்

இந்த வருடம் நடைபெற்ற முதல் பகுதி ஆட்டத்தில் இலங்கையை சேர்ந்த ஒரு வீரர்கள் கூட இடம் பெறவில்லை. ஆனாலும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூலலில் ஐபிஎல் தொடர் நடைபெற்றவுள்ளதால், நடப்பாண்டு தொடரில் இலங்கையைச் சேர்ந்த குசால் பெரேரா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை