SL vs BAN: இலங்கை டி20 அணி அறிவிப்பு; ஷனகா, கருணரத்னேவுக்கு வாய்ப்பு!
Sri Lanka T20 squad: வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தசுன் ஷனகா மற்றும் சமிகா கருணரத்னே உள்ளிட்டோருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதையடுத்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான 17 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் அனுபவ ஆல் ரவுண்டர் சரித் அசலங்கா மற்றும் சமிகா கருணரத்னே ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஷனகா கடந்த 2024ஆம் ஆண்டிற்கு பிறகும், கருணரத்னே 2023ஆம் ஆண்டிற்கு பிறகும் இலங்கை டி20 அணிக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர்த்து இந்த அணியில் அறிமுக வீரர் ஈஷான் மலிங்காவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் எஸ்ஏ20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு குசால் மெண்டிஸ், குசால் பெரேரா, மதீஷா பதிரானா, பதும் நிஷங்கா, வநிந்து ஹசரங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷ்னா உள்ளிட்டோரும் இந்த டி20 அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கை டி20 அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க ஃபெர்னாண்டோ, தசுன் ஷனகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, சாமிக்க கருணாரத்ன, மதீஷ பதிரான, நுவான் துஷார, பினுர ஃபெர்னாண்டோ, ஈஷான் மலிங்கா.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டி20 அணி: லிட்டன் குமார் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம் ஷேக், தவ்ஹித் ஹிரிடோய், ஜாக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன் பட்வாரி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், ஷக் மஹேதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப், முகமது சைபுதீன்.