புவனேஷ்வர் குமாரை பாராட்டிய கவாஸ்கர், ஸ்மித்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டியிலும் ல இந்திய அணி சொதப்பினாலும் ஒரே ஒரு நல்ல விசயம் மட்டும் நடந்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இந்த நட்சத்திரம் இடம்பெற்றே ஆக வேண்டும் என்று கவாஸ்கர், கிரேம் ஸ்மித் கூறிவுள்ளனர். அவர் வேறு யாரும் இல்லை. நம் புவனேஸ்வர் குமார் தான். புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 13 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
புது பந்தை பயன்படுத்திய புவனேஸ்வர் குமார் முதல் ஓவரிலேயே ஹெண்டரிக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று அவருடைய 2ஆவது ஓவரில் நக்கில் பந்தை வீசி பிரிட்டோரியஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று பவர்பிளேவின் கடைசி ஓவரில் வெண்டர்டுசனை வீழ்த்தினார். இதன் மூலம் பவர் பிளேவில் 3 ஓவரில் 10 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் வீழ்த்தி இருக்கிறார்.
பவர்பிளேவில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை இதற்கு முன்பு 2012ஆம் ஆண்டு தான் வீழ்த்தி இருக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கிரேம் ஸ்மிம், “புவனேஸ்வர் குமார் புத்திசாலித்தனமாக பந்துவீசினார். ஹெண்டரிக்ஸ் இன்ஸ்ஹிங் பந்தை எதிர்கொள்வதில் திணறுவார் என முன்பே அறிந்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று நக்கல் பந்தை வைத்து பிரிட்டோரியஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இது சிறந்த பவுலிங். தீட்டிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கிறார் புவனேஸ்வர் குமார்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “வெள்ளை நிற பந்து இப்படி ஸ்விங் ஆகாத. ஆனால் அவர் அந்த திறமையை வளர்த்துள்ளார்.ரிஷப் பண்ட் கேப்டன்ஷியை இதற்காகவே பாராட்டுகிறேன். பந்து பழசு ஆகிவிட்டது என்றால் பந்து ஸ்விங் ஆகாது என்பதை உணர்ந்த அவர் தொடக்கத்திலேயே 3 ஓவரை வீச வைத்துவிட்டார். அதன் பிறகு புவனேஸ்வர் குமார் பந்துவீசி இருந்தால், இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படத்தி இருக்க முடியாது. ஆஸதிரேலியாவிலும் இது போல் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் புவனேஸ்வர் குமார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்” என்று தெரிவித்தார்.