ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வாந்த ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவருடன் இணைந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக நேற்றைய தினம் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
இதனால் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. கேப்டன்சிக்கான தேர்வில் ஷுப்மன் கில், கேஎல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் புமரா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணங்களால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பி இருக்காது என்ற தகவல்கள் வெளியாகிவுள்ளன. மேற்கொண்டு பும்ராவும் அணியின் கேப்டன் பதவியை ஏற்கபோவதில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், இந்திய அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக வேறு ஒரு வீரரை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து வரும் நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்குமாறு முன்னாள் இந்திய வீரர் சுனில் காவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “தனக்கு என்ன பணிச்சுமை இருக்கிறது என்பதை தன்னை விட வேறு யார் தெரிந்து கொள்ள முடியும்? நீங்கள் வேறொருவரை கேப்டானாக நியமித்தால், அவர்கள் எப்போதும் பும்ராவிடமிருந்து கூடுதல் ஓவரை விரும்புவார்கள். அவர் உங்கள் நம்பர் 1 பந்து வீச்சாளராக இருப்பதால், அவர் கேப்டனாக இருந்தால் 'ஆம், இதுதான் நான் ஓய்வு எடுக்க வேண்டிய நேரம்' என்பதை அவரே முடிவு செய்வார். என்னைப் பொறுத்தவரையில் பும்ரா தான் இதற்கு சரியான தேர்வாக இருப்பார்.
அவருடைய வேலைப்பளுவைச் சுற்றி நடக்கும் ஊகங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். எத்தனை ஓவர்கள் வீச வேண்டும், எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்துகொள்ளும் வகையில் கேப்டன் பொறுப்பை அவருக்குக் கொடுங்கள். அதுதான் சிறந்த விஷயம். மேலும் அவரால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியாது என்ற கருத்தும் உள்ளது. என்னைப் பொறுத்தவரையில் தனது உடற்தகுதியைப் பொறுத்து அவரால் ஓய்வு எடுக்க முடியும் என்றும் நபுகிறேன்.
Also Read: LIVE Cricket Score
அதனால் அவர் டெஸ்ட் போட்டியைத் தவறவிட வேண்டிய அவசியமில்லை. மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டுக்குப் பிறகு, எட்டு நாட்கள் இடைவெளி உள்ளது. குணமடைய போதுமான நேரம் உள்ளது. பின்னர், இரண்டு தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அது பரவாயில்லை. பின்னர் மற்றொரு இடைவெளி உள்ளது. நீங்கள் அவருக்கு கேப்டன் பதவியைக் கொடுத்தால், எப்போது பந்து வீச வேண்டும் என்பதை அறிய அவர் சிறந்த நபராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.