Joe Root Record: ஹெடிங்லேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், ஷிவ்நரைன் சந்தர்பால் ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார்.

Advertisement

ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் கடைசி இன்னிங்ஸில் அரைசதம் கடந்ததன் மூலம் சில சதனைகளையும் படைத்துள்ளார். 

Advertisement

அந்தவகையில் இப்போட்டியின் கடைசி இன்னிங்ஸில் ஜோ ரூட் 84 பந்துகளை எதிர்கொண்ட 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்காற்றினார். இந்த அரைசதத்தைன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆவது இன்னிங்ஸில் ஆதிக அரைசதங்க்ளை கடந்த வீரர்கள் பட்டியலி ஜோ ரூட் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 12 முறை 4ஆவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து இரண்டாம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் ஜோ ரூட்டும் 12ஆவது முறையக நான்காவது இன்னிங்ஸில் அரைசதத்தைப் புதிவுசெய்து சுனில் கவாஸ்கருடன் இணைந்து கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். யை சமன் செய்தார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர்கள் ஷிவ்நரைன் சந்தர்பால், கிறிஸ் கெயில் மற்றும் தென் ஆப்பிரிகாவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் தலா 13 முறை 4அவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்டின் 4வது இன்னிங்ஸில் அதிக 50+ ஸ்கோர்கள்

  • 13 - ஷிவ்நரைன் சந்தர்பால்
  • 13 - கிறிஸ் கெய்ல்
  • 13 - கிரேம் ஸ்மித்
  • 12* - ஜோ ரூட்
  • 12 - சுனில் கவாஸ்கர் 

இதைத் தவிர்த்து இந்த அரைசதத்தின் மூலம் ஜோ ரூட் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 66ஆவது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் அவர் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நரைன் சந்த்ர்பால் 66 அரைசதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஜோ ரூட்டும் 66 அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

Advertisement

அதிக டெஸ்ட் அரைசதங்கள்

  • 68 - சச்சின் டெண்டுல்கர் (329 இன்னிங்ஸ்)
  • 66* - ஜோ ரூட் (281 இன்னிங்ஸ்)
  • 66 - ஷிவ்நரைன் சந்தர்பால் (280 இன்னிங்ஸ்)
  • 63 - ஆலன் பார்டர் (265 இன்னிங்ஸ்)
  • 63 - ராகுல் டிராவிட் (286 இன்னிங்ஸ்)
  • 62 - ரிக்கி பாண்டிங் (287 இன்னிங்ஸ்)

Also Read: LIVE Cricket Score

இப்போட்டி குறித்து பேசினால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களையும், இங்கிலாந்து அணி 465 ரன்களிலும் ஆல் அவுட்டானது. அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களில் ஆல் அவுட்டாகி, எதிரணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 5ஆம் நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News