ஐபிஎல் 2022: ஜடேஜாவை புகழ்ந்த கிரேம் ஸ்வான்

Updated: Fri, May 06 2022 19:50 IST
Graeme Swann On Ravindra Jadeja's "Big" Decision To Leave CSK Captaincy (Image Source: Google)

ஐபிஎல் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு சற்று மோசமானதாக அமைந்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்று ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் இனி சென்னை அணி கலக்கப்போகிறது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கேப்டன்சி பிரச்சினையால் ஜடேஜாவால் தனது ஆட்டத்தை கூட சிறப்பாக முடியவில்லை. இதனால் கடைசி நேரத்தில் மீண்டும் தோனியிடமே கேப்டன் பதவியை கொடுத்துள்ளார் ஜடேஜா. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அணியை எதிர்த்து விளையாட பிடிக்கும். அந்தவகையில் ஆர்சிபிக்கு எதிராக ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுவிட்டார். ஆனால் மற்ற அணிகளுடன் அவரால் சரியாக வழிநடத்த முடியவில்லை. அவருக்கு கேப்டன்சி செய்ய வரவில்லை என்பது தான் இதற்கு அர்த்தம்.

ஜடேஜா இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விஷயம். ஏனென்றால் ஆண்களின் ஈகோ, இதுபோன்று ஒப்புக்கொள்ள ஏற்றுக்கொள்ளாது. அந்தவகையில் ஜடேஜாவை பாராட்ட வேண்டும். சிஎஸ்கேவுக்கு தோனி வந்தது மகிழ்ச்சியான ஒன்று. சிஎஸ்கேவுக்காக அவர் செய்தது மிகப்பெரிய விஷயமாகும்” என்று தெரிவித்தார்.

இதே போல ரவிசாஸ்திரியும் புகழ்ந்துள்ளார். அதில், “மிகவும் வெளிப்படையாக ஜடேஜா தன்னால் முடியவில்லை என விலகியது பாராட்டுக்குறியது. நானாக இருந்திருந்தால் கூட சொல்லியிருக்க மாட்டேன். இனி ஜடேஜாவை ஒரு புதிய வீரராக நாம் பார்க்கலாம். கேப்டன்சி பொறுப்புகள் சென்றுவிட்டன. இதனால் முழு வேகத்துடன் களமிறங்குவார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை