ஹர்திக் பாண்டியாவுக்கு தலைவணங்கிய தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Aug 29 2022 12:16 IST
Image Source: Google

ஆசியக் கோப்பை இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஷ்வான் மட்டுமே சிறப்பாக விளையாடி 43 ரன்களை சேர்த்தார். அடுத்து 4ஆவது இடத்தில் களமிறங்கிய அஃப்திகார் அகமதும் 28 ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார். 

பாபர் அசாம் 10, ஃபகர் ஸமான் 10 ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இறுதியில் பௌலர்கள் ஹரிஸ் ரௌப் 13, தஹானி 16 ஆகியோர் கொஞ்சம் ரன்களை அடித்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147/10 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 4/26, ஹார்திக் பாண்டியா 2/33 ஆகியோர் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 12, கே.எல்.ராகுல் 0 ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அடுத்து விராட் கோலி 35, ஜடேஜா 35, ஹார்திக் பாண்டியா 33 ஆகியோர் சிறப்பாக விளையாடி அசத்தியதால், இந்தியா 19.4 ஓவர்களில் 148/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

குறிப்பாக கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டபோது, ஹார்திக் சிக்ஸர் அடித்து வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் ஆட்டத்தின் வெற்றியை ஈட்ட சிக்சர் அடித்து முடித்துக்கொடுத்த ஹர்திக் பாண்டியாவைப் பார்த்து மற்றோரு ஸ்டிரைக்கில் நின்று கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் தலைவணங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை