IND vs SA, 2nd T20I: வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்!

Updated: Sun, Oct 02 2022 22:09 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் விளாசினார்.

விராட் கோலி 49 ரன்கள் எடுக்க, கேஎல் ராகுல் 53 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா தன் பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து இந்தியா விளையாடும் போது திடீரென்று மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு. உடனடியாக மைதான ஊழியர்கள், விரைந்து வந்து பாம்பை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் போட்டி தொடர்ந்தது.

இந்த நிலையில், 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அணியின் கேப்டன் டெம்பா பவுமா, ரூசோவ் டக் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணி 5 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. 2 விக்கெட்டுகளையும் இந்திய வீரர் ஆர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

அப்போது திடீரென்று மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் திடீரென்று எரியாமல் அணைந்தது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து மைதான ஊழியர்கள் விளக்குகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

பணக்கார விளையாட்டு வாரியமாக விளங்கும் பிசிசிஐ கீழ் உள்ள மைதானங்கள் இந்த நிலைமையில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் விளக்குகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை