ஃபெர்னாண்டோ, அசலங்கா அதிரடியில் 276 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை!

Updated: Tue, Jul 20 2021 18:52 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. 

அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ - மினோத் பானுகா இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் 36 ரன்களில் மினோத் பானுகா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராஹபக்க்ஷ சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் அடித்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த தனஞ்செய டி சில்வா தனது பங்கிற்க்கு 32 ரன்களுடன் வெளியேறினார். 

இதையடுத்து களமிறங்கிய சரித் அசலாங்கா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். அவருடன் இணைந்து விளையாடிய கருணர்த்னேவும் சில பவுண்டரிகளை விளாசி உதவினார்.

இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 65 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை