இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Oct 08 2022 20:02 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராஞ்சியிலுள்ள ஜெஎஸ்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் இழக்காது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஜெஎஸ்சிஏ மைதானம், ராஞ்சி
  • டாஸ் நேரம் - மதியம் 1 மணி
  • போட்டி நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் பேட்டிங், பீல்டிங், பவுலிங் என அனைத்து துரையிலும் சொதப்பியது. அதிலும் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக தீபக் சஹாரும் தொடரிலிருந்து விலகியுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஃபார்மில் இருக்கும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றப்படி ராகுல் திரிபாதி, சபாஷ் அஹ்மத், முகேஷ் குமார் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் ஒருநாள் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் அந்த அணியின் பேட்டிங்கில் டி காக், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர் ஆகியோர் மிரட்டிய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இங்கிடி, ரபாடா, பார்னேல் ஆகியோர் இருந்தாலும், மார்கோ ஜன்சென், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, பெஹ்லுக்வாயோ ஆகியோரு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 88
  • இந்தியா - 35
  • தென் ஆப்பிரிக்கா- 50
  • முடிவில்லை - 3

உத்தேச அணி

இந்தியா - ஷிகர் தவான், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய்/ வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அவேஷ் கான்.
    
தென் ஆப்பிரிக்கா - ஜென்மன் மலான், குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென்
  •      பேட்டர்ஸ் - சுப்மான் கில், டேவிட் மில்லர், ஷ்ரேயாஸ் ஐயர்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஷர்துல் தாக்கூர், வெய்ன் பார்னெல்
  •      பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை