இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Oct 04 2022 10:31 IST
India vs South Africa, 3rd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

கவுஹாத்தியில் பேட்டிங்கில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு 237 ரன்களை வேட்டையாடி இருந்தது. ஆனால் பந்து வீச்சில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியாமல் போனது. தென் ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கிய நிலையிலேயே தோல்வியை சந்தித்தது. அந்த அணி பவர்பிளேவில் 45 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இறுதிக்கட்டத்தில் இது பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்று நடைபெறும் ஆட்டம் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி டி 20 போட்டி என்பதால் பந்துவீச்சில் மீண்டும் ஒரு சோதனை கட்டத்தை இந்திய வீரர்கள் எதிர்கொள்ளக்கூடும். ஏனெனில் பேட்டிங்கில் கேஎல்ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே சிறந்த பார்முக்கு திரும்பிவிட்டனர். பந்து வீச்சு மட்டுமே இன்னும் வலுப்பெறாமல் உள்ளது.

ஜஸ்பிரீத் பும்ரா இல்லாதது இந்திய அணியின் பந்துவீச்சு துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது, குறிப்பாக இறுதிக்கட்ட ஓவர்களில் தடுமாற்றம் காண்கிறது. டி 20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பும்ரா முழு உடற்தகுதியை பெறாதநிலை ஏற்பட்டால் இந்திய அணி மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ள தீபக் சாஹர், தொடக்க ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதிக் கட்ட ஓவர்களில் அழுத்தம் கொடுப்பவராக இல்லாதது குறையாக உள்ளது.

அர்ஷ்தீப் சிங் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக செயல்படுபவராக இருந்தாலும் அவரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்படுவதில்லை. குவாஹாட்டி போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவர், 3 நோபால்களை வீசினார். தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டு வருவதில் அர்ஷ்தீப் சிங் கவனம் செலுத்தக்கூடும்.

காயத்தில் இருந்து திரும்பியதில் இருந்து ஹர்ஷால் படேலின் பந்து வீச்சு மாறுபாடுகள் நினைத்த அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் அமையவில்லை. இது ஒருபுறம் இருக்க அஸ்வின் இரு ஆட்டங்களில் விளையாடிய போதிலும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை.

இதற்கிடையே தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல், விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மாவுடன் ரிஷப் பந்த்அல்லது சூர்யகுமார் யாதவ்தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். விராட் கோலி இடத்தில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார். 2ஆவது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளை மட்டுமே சந்தித்தார். இதனால் பேட்டிங்கில் அவருக்கு கூடுதல் வாய்ப்பு வழங்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும். பந்து வீச்சில் மொகமது சிராஜ் களமிறங்கக் கூடும்.

அதேசமயம் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு மிக அருகில் சென்றன. அதிலும் டேவிட் மில்லர், குயின்டன் டி காக் ஆகியோரது பேட்டிங் அந்த அணிக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. இதில் டேவிட் மில்லரின் சதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. 

ஆனால் பந்துவீச்சை பொறுத்தமட்டில் ரபாடா, நோர்ட்ஜே, இங்கிடி என முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் இருந்த பச்சத்திலும் அவர்களால் இந்திய அணி வீரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது அணியின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்குடன் களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

உத்தேச அணி

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் / ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி / ஷாபாஸ் அகமது, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின் / யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்
    
தென் ஆப்பிரிக்கா - குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரிலீ ரோசோவ் / ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி

ஃபேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக்
  •      பேட்டர்ஸ் – விராட் கோலி/ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம்
  •      ஆல்-ரவுண்டர்கள் - அக்சர் படேல், கேசவ் மகாராஜ்
  •      பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை