இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகாத பிரித்வி; காரணம் இதுதான்!

Updated: Sat, May 08 2021 20:12 IST
Image Source: Google

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வரும் ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அந்த பட்டியலில் இளம் வீரர் பிரித்வி ஷா இடம் பெறாதது பேசுப்பொருளாகியுள்ளது.

21 வயதாகும் இளம் வீரர்கள் கடந்த 2 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதே போல தொடர் காயங்களால் தொடரில் நீடிக்க முடியாமல் போனது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும், பிரித்வி ஷாவின் சொதப்பல் பயணம் தொடர்ந்தது. இதனால், இங்கிலாந்து தொடரின் போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனினும் சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் 800 ரன்களுக்கு மேல் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் 2021 தொடரிலும் டெல்லி அணிக்காக அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்தார். 8 போட்டிகளில் ஆடிய அவர் 308 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுகுறித்து பிரித்வி ஷாவிற்கு தேர்வு குழுவில் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில், இந்திய அணியில் இடம்பெறுவதற்கான சரியான உடல் தகுதியுடன் ஷா இல்லையென்றும், அணியில் இடம்பெறவேண்டும் என்றால் உடல் எடையை குறைக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அலுவர் ஒருவர், “பிரித்வி ஷா உடல் எடையை சற்றுக் குறைக்க முயற்சிக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடரின் போது கூட ஃபீல்டிங்கில் அவருக்கு நிறைய பிரச்னைகள் இருந்தது. ரிஷப் பந்திடம் இதே போன்று தான் முன்பு இருந்தார்.ஆனால் உடல் எடையை குறைத்து தற்போது சிறப்பாக ஆடி வருகிறார். எனவே பிரித்வி ஷாவுக்கு ரிஷப் பந்த் தான் உதாரணம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை