ஒரு ரன்னுக்காக விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரலாகும் வீடியோ!

Updated: Thu, Jul 31 2025 22:26 IST
Image Source: Google

இங்கிலாந்து - இந்தியா இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வாழ்வா சாவா போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 

அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரர் கேஎல் ராகுலும் 14 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். இந்த சரிவுக்கு பிறகு சாய் சுதர்ஷன் - ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்து 45 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் கவாஸ்கரின் சாதனையை கில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

கஸ் அட்கின்சன் வீசிய 27ஆவது ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட கில் அதனை தடுத்த கையோடு ரன் எடுக்க ஓடினார். ஆனால் மறுமுனையில் இருந்த சாய் சுதர்சன் வேண்டாம் என்று கூறவே, கில் மீண்டும் கிரீசுக்குள் செல்ல முயற்சித்தார். ஆனால் அதற்குள் பந்தை பிடித்த அட்கின்சன் ஸ்டம்பை நோக்கி துல்லியமான த்ரோவை அடித்து ஷுப்மன் கில்லை ரன் அவுட் செய்து அசத்தினார். இந்நிலையில், ஷுப்மன் கில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த டெஸ்ட் தொடரில் ஆபாரமாக விளையாடியுள்ள ஷுப்மன் கில் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், ஒரு இரட்டைச் சதம் என மொத்தமாக 743 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இத்தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் ஷுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். இவ்வாறான நிலையில் தான் இன்றைய போட்டியில் அவர் தேவையில்லாமல் ரன் அவுட்டாகியது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 

VIDEO:

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப்(கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித்(கேப்டன்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேடிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மான் கில்(கேப்டன்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை