கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!

Updated: Fri, Aug 01 2025 23:02 IST
Image Source: Google

1. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

2. வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 179 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. 

3. இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட்: லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக் காயம் காரணமாக விலகியுள்ளர். அதேசமயம் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காத ஜஸ்பிரித் பும்ராவும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

4. புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 149 ரன்களையும், நியூசிலாந்து 307 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டாகினர். அதன்பின் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 165 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாக, 8 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி எளிதாக விரட்டி வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

5. உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் (WCL) 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா சாம்பியஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸை எதிர்த்து தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை