ஐபிஎல் 2021: பார்வையாளர்கள் முன் விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளது - ஈயன் மோர்கன்!
கரோனா தொற்றால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது மீண்டும் வருகிற 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வந்த இத்தொடரில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளுக்கான டிக்கெட் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பார்வையாளர்கள் மத்தியில் ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் -க்கு மீண்டும் ரசிகர்களைக் கொண்டிருப்பது நம்பமுடியாத உற்சாகத்தை அளித்துள்ளது. ஈடன் கார்டனில் கேகேஆர் ரசிகர்களின் கரகோஷங்களை கேட்க நீண்ட நேரமாகிவிட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக, தற்போது எங்களால் எங்கள் சொந்த மைதானத்தில் அதனை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் தற்போது அமீரகத்தில் அதை எங்களால் கேட்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.