ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை!

Updated: Mon, Feb 21 2022 21:00 IST
Image Source: Google

உலக அளவில் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு முன்னோடியாக கருதப்படும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 2 நாட்கள் மெகா அளவில் நடந்த இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்ற போதிலும் இறுதியாக 204 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஸிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் தாங்கள் விரும்பிய மயங் அகர்வால், அர்ஷிதீப் சிங் ஆகிய 2 வீரர்களை மட்டுமே அந்த அணி தக்கவைத்து ஆச்சரியப்படுத்தியது.

இதன் காரணமாக மற்ற அணிகளை காட்டிலும் 72 கோடிகள் என்ற அதிகபட்ச தொகையுடன் இந்த ஏலத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. குறிப்பாக தங்கள் அணியின் கேப்டன் யார் என்று தீர்மானிக்காத வேளையில் இங்கிலாந்தைச் சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டனை 11.5 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் போட்டிபோட்டு வாங்கியது.

அதேபோல் தென் ஆபிரிக்காவின் நட்சத்திர அதிரடி வேகப்பந்துவீச்சாளர் ககிஸோ ரபாடாவை 9.25 கோடிகளுக்கு பஞ்சாப் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் வீரர் மற்றும் பினிசெர் ஷாருக்கானை அந்த அணி நிர்வாகம் மீண்டும் 9 கோடிகள் கொடுத்து வாங்கியது தமிழக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், ஓடின் ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்களை அந்த அணி நிர்வாகம் நல்ல விலைக்கு வாங்கியது. மொத்தத்தில் இந்த ஏலத்தில் மற்ற அணிகளை காட்டிலும் அதிக பட்சமாக 23 வீரர்களை வாங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் தனது அணியை முழுமைப்படுத்தி உள்ளது.

இறுதியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உட்பட மொத்தம் 25 வீரர்களை வாங்கியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் அதற்காக 86.55 கோடிகளை செலவு செய்தது. இந்த 25 பேரில் 18 வீரர்கள் இந்தியாவிலிருந்தும் 7 வீரர்கள் வெளிநாடுகளிலிருந்தும் இடம் பிடித்துள்ளார்கள். இவர்களை வாங்க செலவு செய்தது போக மற்ற அணிகளை காட்டிலும் அதிகப்பட்சமாக அந்த அணியிடம் மீதி இன்னும் 3.45 கோடிகள் உள்ளது.

ஐபிஎல் 2022 தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மொத்த வீரர்களின் விபரம் இதோ:
மயங் அகர்வால் (14 கோடி), அர்ஷிதீப் சிங் (4 கோடி), லியாம் லிவிங்ஸ்டன் (11.5 கோடி), ககிஸோ ரபாடா (9.25 கோடி), ஷாருக்கான் (9 கோடி), ஷிகர் தவான் (8.25 கோடி), ஜானி பேர்ஸ்ட்டோ (6.75 கோடி), ஓடென் ஸ்மித் (6 கோடி), ராகுல் சஹர் (5.25 கோடி), ஹர்ப்ரீத் ப்ரார் (3.8 கோடி), ராஜ் அங்கட் பாவா (2 கோடி), வைபவ் அரோரா (2 கோடி), நாதன் எல்லிஸ் (75 லட்சம்), ப்ரப்சிம்ரன் சிங் (60 லட்சம்), ரிஷி தவான் (55 லட்சம்), சந்தீப் சர்மா (50 லட்சம்), பனுக்கா ராஜபக்சா (50 லட்சம்), பென்னி ஹோவெல் (40 லட்சம்), இஷான் போரல் (25 லட்சம்), பெராக் மன்கட் (20 லட்சம்), ரிட்டிக் சட்டர்ஜீ (20 லட்சம்), பால்டேஜ் தண்டா (20 லட்சம்), அன்ஸ் படேல் (20 லட்சம்), அதர்வா டைட் (20 லட்சம்), ஜிதேஷ் சர்மா (20 லட்சம்)

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

உத்தேச லெவன்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ* (கீப்பர்), மயங் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன்*, ஷாருக்கான், ரிஷி தவான், ஓடின் ஸ்மித்*, ராகுல் சஹர், ககிஸோ ரபாடா*, அர்ஷிதீப் சிங், இஷான் போரேல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை