ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை & அணி விவரம்!

Updated: Fri, Mar 18 2022 17:41 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியொல் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. மேலும் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

மேலும் 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இதுவரை 4 முறை கோப்பையை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐந்தாவது கோப்பையைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக கடந்தவாரமே சூரத்தில் முகாமிட்டுள்ள சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது. கடந்த சில காலங்களாக பௌலராக மட்டுமில்லாமல் ஆல் ரவுண்டராக சஹார் தனது திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து, அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகள் முனைப்பு காட்டின. 

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு அவரை தக்கவைத்துக்கொண்டது. இதனிடையே, 26ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதனால் இப்போட்டியில் தீபக் சஹார் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகளுடன் மோதவுள்ளது மற்றும் அணி வீரர்கள் குறித்த விபரத்தைப் இப்பதிவில் காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி அட்டவணை

1.போட்டி 1 - மார்ச் 26, சனி, இரவு 7:30 மணி

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

2.போட்டி 7 - மார்ச் 31, வியாழன், இரவு 7:30 மணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

3.போட்டி 11 - ஏப் 03, ஞாயிறு, மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

4.போட்டி 17 - ஏப் 09, சனி, பிற்பகல் 3:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

5.போட்டி 22 - ஏப். 12, செவ்வாய், மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

6.போட்டி 29 - ஏப். 17, ஞாயிறு, மாலை 7:30

குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

7.போட்டி 33 - ஏப் 21, வியாழன், மாலை 7:30

மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

8.போட்டி 38 - ஏப். 25, திங்கள், மாலை 7:30

பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

9.போட்டி 46 - மே 01, ஞாயிறு, மாலை 7:30

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், புனே

10.போட்டி 49 - மே 04, புதன், மாலை 7:30

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், புனே

11.போட்டி 55 - மே 08, ஞாயிறு, மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ், டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி, மும்பை

12.போட்டி 59 - மே 12, வியாழன், மாலை 7:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

13.போட்டி 62 - மே 15, ஞாயிறு, பிற்பகல் 3:30

சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், வான்கடே ஸ்டேடியம், மும்பை

14.போட்டி 68 - மே 20, வெள்ளி, மாலை 7:30

ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்

ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், கிறிஸ் ஜோர்டன், ஜகதீசன், ஆடம் மில்னே, மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, அன்ஷு சேனாதிபதி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்‌ஷனா, ஷிவம் தூபே, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை