ஐபிஎல் 2022: சஞ்சு சாம்சனை தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Fri, Nov 26 2021 12:20 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த முறை புதிதாக 2 புதிய அணிகள் வரவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல பழைய அணிகளுக்கு வீரர்களை தக்கவைப்பதில் சில விதிமுறைகளும், புதிய அணிகளுக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது ஏற்கனவே உள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், குறைந்த பட்சம் 1 அயல்நாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. இதே போல ஏலத்தில் விடப்படும் வீரர்களை முன்கூட்டியே 2 புதிய அணிகளும் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீரர்களை தக்கவைப்பதில் ரூ.48 கோடியையும் செலவு செய்ய ராஜஸ்தான் அணி திட்டமிட்டுள்ளது. அந்த அணியின் முதன்மை தேர்வாக கேப்டன் சஞ்சு சாம்சன் தக்கவைக்கப்படுகிறார். விதிமுறை படி அவருக்கு ரூ.16 கோடி வழங்கவேண்டும். ஆனால் ரூ.14 கோடிக்கே ராஜஸ்தான் அணி உடன்பாடு செய்துக்கொண்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இணைந்த கடந்தாண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச்செல்ல தவறிவிட்டார். எனினும் அவர் 484 ரன்களை குவித்து சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தார்.

சாம்சனுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லரை தக்கவைக்க ராஜஸ்தான் அணி முடிவெடுத்துள்ளது. 3ஆவது வீரராக பென் ஸ்டோக்ஸை தக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடருக்கு தான் திரும்பவுள்ளார். எனவே அவர் ஐபிஎல்-க்கு வர ஒப்புக்கொண்டால் அவரே தேர்வாக இருப்பார். அப்படி இல்லையென்றால் லிவிங்ஸ்டன் தான் ஒப்பந்தம்ச் செய்ய அதிக வாய்ப்புள்ளது. அவர் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார்.

கடைசி மற்றும் 4ஆவது வீரராக யாஷாஸ்வி ஜெய்ஸ்வால் தக்கவைக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். எனவே அவரை ரூ.4 கோடிக்கு தக்கவைக்க முடிவெடுத்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை