ஐபிஎல்: புதிய உச்சம் தொட்ட ஒளிபரப்பு உரிமம்!
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் ஆன் லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் டிஸ்னி ஸ்ட்ர், சோனி, ரிலையன்ஸ், ஜி, சூப்பர் ஸ்போர்ட், டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அமேசான் , கூகுள் மற்றும் யூ டியுப் நிறுவனங்கள் கடைசி நேரத்தில் வெளியேறிவிட்டன.
இம்முறை, ஐபிஎல் ஒளிபரபப்பு எரிமம் நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. பேக்கஜ் ஏ பிரிவில் இந்தியாவின் தொலைக்காட்சி உரிமமும, கேக்கஜ் பி பிரிவில் இந்தியாவின் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான உரிமமும் ஏலம் மூலம் முதலில் நடைபெற்றது. பேக்கஜ் சியில் சீசனின் தொடக்க போட்டியும், பிளே ஆப் போட்டிகளுக்கான ஏலமும், பேக்கஜ் டி-யில் உலக அளவிலான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்திற்கான ஏலமும் நடைபெறுகிறது.
அதில் , ஒரு சீசனில் குறைந்தபட்சம் 74 போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பேக்கஜ் ஏ-வில் ஒரு போட்டிக்கான ஆரம்ப ஏலம் விலை 48 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதே போன்று பேக்கஜ் பி பிரிவில் ஒரு போட்டிக்கான ஆரம்ப விலை 33 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஏலம் கேட்கும் போதும் 50 லட்சம் ரூபாய் வரை உயரும்
முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில் ஒரு போட்டிக்கான ஏலம் 57 கோடி ரூபாய் வரை சென்றது. இது அடிப்படை விலையை விட 17 சதவீதம் அதிகமாகும். இதே போன்று பேக்கஜ் பி க்கான ஒரு போட்டிக்கான விலை 48 கோடி வரை சென்றுள்ளது. இதன் மூலம் இரண்டு பேக்கஜ் மூலம் தற்போது வரை ஒரு போட்டிக்கான ஏலம் 105 கோடி வரை சென்றுள்ளது.
இது முந்தைய ஐபிஎல் தொடரில் வெறும் 54 கோடி ரூபாய் எனற அளவில் இருந்தது. இதன் மூலம் தற்போது வரை பிசிசிஐக்கு 42 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்க உள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற கால்பந்து தொடரை பின்னுக்கு தள்ளி உலகம் அளவில் NFL தொடருக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் 2ஆவது இடத்தை பிடித்துள்ளது.