சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடும் பிசிசிஐ!

Updated: Fri, Mar 07 2025 21:33 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 09ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியல் வெளியிடுவதில் தாமதமாகியுள்ளது. முன்னதாக கடந்த மாதமே பிசிசிஐ வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்சமயம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வீரர்களின் செயல்திறனை கருத்தில் கொண்டு ஒப்பந்த பட்டியலில் பிசிசிஐ சில மாற்றங்களை செய்ய விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தற்போது இதில் தாமதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து வெளியான தகவலின் படி, பிசிசிஐ கடந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களை அறிவித்தது, ஆனால் இந்த முறை வாரியம் அதை சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டி வரை ஒத்திவைத்துள்ளது. மேலும் இதற்கான காரணங்களாக ஏ+ மற்றும் ஏ பிரிவுகளில் பிசிசிஐ மாற்றம் செய்ய விரும்புவதாகவும், இதில் தற்போதுள்ள சில இந்திய வீரர்கள் ஏ+ பிரிவில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஏ+ கிரேடில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மட்டுமே உள்ளனர். மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்த கிரேடு வழங்கப்படுகிறது. ஆனால் இதில் தற்போது விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதன் காரண்மாக அவர்கள் இப்போது ஏ+ பிரிவில் இருந்து கீழிறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேற்கொண்டு கடந்த ஆண்டு உள்நாட்டு போட்டிகளை தவறவிட்டதன் காரணமாக பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்போது மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தம் கிடைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் அக்ஸர் படேல் மற்றும் ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்கள் ஏ பிரிவில் பிசிசிஐ ஒப்பந்தத்தைப் பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், ரோஹித் சர்மா கேப்டனாக நீடிப்பாரா? கோலியும் ஜடேஜாவும் ஏ+ பிரிவில் நீடிப்பார்களா? ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தை பெறுவாரா என அனைத்து கேள்விகளுக்கும் விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்தம் பெற்ற வீரர்கள்

கிரேடு ஏ+: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

கிரேடு ஏ: ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா

கிரேடு பி: சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

கிரேடு சி: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், ராஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல்.

Also Read: Funding To Save Test Cricket

வேகப்பந்து வீச்சு ஒப்பந்தங்கள்: ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வத் கவேரப்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை