அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sat, Jun 25 2022 16:32 IST
Ireland vs India, 1st T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை ஜூன் 26-ஆம் தேதி துவங்குகிறது. டப்ளின் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அயர்லாந்து சென்று பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. 

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிக- அயர்லாந்து vs இந்தியா
  • இடம் - கேஷல் அவென்யூ, டப்லின்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் இளம் வீரர்களை கொண்டு ஹார்திக் பாண்டியா தலைமையின் கீழ் இந்திய அணியானது அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் கலக்கிய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்திய இளம் வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. 

அதன்படி ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அணியில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வெளியேறி உள்ளதால் அவர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் அந்த இடத்தை நிவர்த்தி செய்வார்கள். அது தவிர அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.

அதோடு இந்த அயர்லாந்து அணிக்கெதிரான தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக இடம்பெற்றிருக்கும் ராகுல் திரிப்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. எனவே அவரும் உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்று இந்திய அணியின் அறிமுக வாய்ப்புக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் ஆண்டி பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஹேரி டெக்டர், ஆண்டி மெக்பிரைன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 3
  • இந்தியா வெற்றி - 3
  • அயர்லாந்து வெற்றி - 0

உத்தேச அணி

அயர்லாந்து - பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி (கே), கரேத் டெலானி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், ஸ்டீபன் டோஹனி, ஆண்டி மெக்பிரைன், கர்டிஸ் கேம்பர், மார்க் அடேர், பாரி மெக்கார்த்தி, ஜோஷ் லிட்டில்

இந்தியா - ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கே), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.

பேண்டஸி லெவன்

  •      விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன் (சி), லோர்கன் டக்கர்
  •      பேட்டர்ஸ் - ஆண்டி பால்பிர்னி, ஹாரி டெக்டர், சூர்யகுமார் யாதவ்
  •      ஆல்-ரவுண்டர்கள் - பால் ஸ்டிர்லிங், ஹர்திக் பாண்டியா (விசி)
  •      பந்துவீச்சாளர்கள் - அவேஷ் கான், ஹர்ஷல் படேல், பேரி மெக்கார்த்தி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை