முதல் பந்தில் சிக்சர்; சாதனைப் படைத்தா இஷான்!

Updated: Mon, Jul 19 2021 09:46 IST
Image Source: Google

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் அகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனார்கள். 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 262 ரன்கள் எடுத்தது. 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் பிரித்வி ஷா 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதன்பின் அறிமுக வீரர் இஷான் கிஷன், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இஷான் கிஷன், 33 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் அரை சதம் கடந்தார். இதன்மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் கடந்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த குருணால் பாண்டியா முதலிடத்தில் உள்ளார்.

மேலும் நேற்றைய ஆட்டத்தில் அரை சதம் அடித்ததன் மூலம், அறிமுகமான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் பெற்றுள்ளார். சர்வதேச டி20 அறிமுக போட்டியின்போது முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::