கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 18, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளார் குவேனா மகாபா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் டி20 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ், முதல் ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி நாளை தினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அபிஷேக் சர்மாவுடன் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
3. துலீப் கோப்பை தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இஷான் கிஷான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆகாஷ் தீப்பும் ஓய்வில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அவரும் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அபிமன்யூ ஈஸ்வரன் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி நாளைய தினம் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ஷஃபாலி வர்மா, அமஞ்சோத் கவுர் ஆகியோரும் சமீபத்தில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிராந்தி கவுட், சாரணி ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
5. கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 232 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், செயிண்ட் கிட்ஸ் அணி 219 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் டிரின்பாகோ அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ சதமடித்து அசத்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.