இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன. 

Advertisement

அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன. 

Advertisement

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டன. இதில் கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷானும், அணியின் துணைக்கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங் உள்ளிட்டோர் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் துலீப் கோப்பை தொடருக்கு முன்னதாக கிழக்கு மண்டல அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இஷான் கிஷான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷானை தேர்வு செய்யவே பிசிசிஐ ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் அப்போது அவருக்கு காயம் இருந்ததை அடுத்து ஜெகதீசன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில் தற்சமயம் இஷான் கிஷான் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் துலீப் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக அபிமன்யூ ஈஸ்வன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தோப் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்போது இஷான் கிஷானும் விலகியுள்ளது கிழக்கு மண்டல அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கிழக்கு மண்டல அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டேனிஷ் தாஸ், ஸ்ரீதாம் பால், சரண்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உத்கர்ஷ் சிங், மனிஷி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், முக்தார் உசேன், முகமது ஷமி

Also Read: LIVE Cricket Score
Advertisement

கூடுதல் வீரர்கள்: முக்தர் ஹுசைன், ஆஷிர்வாத் ஸ்வைன், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News