சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஃபார்ம் குறித்து முகமது கைஃப்!

Updated: Sat, May 14 2022 17:26 IST
Image Source: Google

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று தனது முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஏறக்குறைய ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். தொடக்கத்தில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து 5 வெற்றிகளைப்பெற்றது. பின்னர் வரிசையாக 5 தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இணையதளம் ஒன்றுக்குப்பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “  இப்போது சன்ரைசர்ஸ் அணி வலிமையான அணி என்று நான் நினைக்கவில்லை. ஒருநேரத்தில் வேகப்பந்துவீச்சில் வலிமையாக இருந்தது. ஆனால் ஜான்ஸனை நீக்கியது, அதன்பின் கார்த்திக் தியாகியை நீக்கியது. சில பந்துவீச்சாளர்களையும் நீக்கியபின்அந்த அணியால் எப்படி வலிமையாக இருக்க முடியும். அதே வலிமையான அணி இப்போது இல்லை. 

முதல் இருபோட்டிகளில் தோல்வி அடைந்து அதன்பின் தொடர்ந்து 5 வெற்றிகளை சன்ரைசர்ஸ் அணி பெற்றது. நடராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், ஜான்ஸன் ஆகியோர் அணியில் இருந்ததால் வெற்றி சாத்தியமானது, 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.  ஆனால், இப்போது இந்த 4 பந்துவீச்சாளர்களும் ஒன்றாக ஆடுவதில்லை என்றபோது வெற்றி எவ்வாறு சாத்தியமாகும்

மற்றொரு பிரச்சினை என்னவென்றால் , வேகப்பந்துவீச்சாளர் ஜான்ஸன் பந்துவீச்சில், ரஷித் கான் சிக்ஸர்கள் அடித்ததைப் பார்த்தபின், அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், ஓய்வறைக்குச் சென்று வீரர்களிடம் தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி கடுமையாக திட்டியுள்ளார். கொல்கத்தா அணியில் என்ன நடந்ததோ அதுதான் சன்ரைசர்ஸ் அணியிலும் நடந்திருக்கிறது.

முரளிதரன் பெரும்பாலும் அமைதியாக இருக்கக் கூடியவர் ஆனால், ஜான்ஸனின் மோசமான பந்துவீச்சால் தனது பொறுமையை இழந்து கோபப்பட்டு பேசிவிட்டார். இதுபோன்று முரளிதரன் உள்ளி்ட்டவர்கள் நடக்கும்போது அணியின் ஃபார்ம் குலைந்துவிடும், ரிதம் சிதைந்துவிடும். அணிக்குள் சூழல் நல்லவிதமாக இருக்காது. அந்தப் போட்டிக்குப்பின் ஜான்ஸன் நீக்கப்பட்டார்.

ஆனால் ஐபிஎல் தொடரில்தான் விளையாடிய போட்டிகள் அனைத்திலும் ஜான்ஸன் சிறப்பாகவே பந்துவீசியிருந்தார். ஜான்ஸனை நீக்கிவிட்டு கார்த்திக் தியாகியைக் கொண்டுவந்தார்கள். என்னால் இவர்கள் செயலைப் புரி்ந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை