அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!

Updated: Fri, Jul 18 2025 14:13 IST
Image Source: Google

Manchester Test: இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சமன் செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும், இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிகாக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியின் பிளேயிங் லெவனும் என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் முகமது கைஃப், நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நான்கு நாள்கள் இந்திய அணி சிறப்பாக விளையாடி கடைசி நாள் ஆட்டத்தில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக இந்திய அணி தங்களுடைய திட்டங்களை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மேலும் இத்தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன்செய்ய அதிக வாய்ப்புள்ளது. 

எனவே இந்திய அணி அடுத்த போட்டியில் அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். அணியின் பிளேயிங் லெவன் குறித்து பேசினால், முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணியை அவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் கருண் நாயர் சிறப்பான தொடக்கங்களைப் பெற்றுள்ளார். அதனால் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர் மற்றொரு வாய்ப்புக்கு தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளார். 

Also Read: LIVE Cricket Score

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா நீக்கப்பட்டு, ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே ஒரே மாற்றமாக இருந்தது. மேலும் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதுடன், போராடி தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டிக்கான இந்திய அணியிலும் மாற்றம் தேவையில்லை என்பதை முகமது கைஃப் வலியுறுத்தியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை