ஜெய்ஸ்வால் - ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் - முகமது கைஃப்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நாளை (டிசம்பர் 26) வியாழக்கிழமை முதல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி தொடக்க வீரர் இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில், ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கினார். ஆனால் இத்தொடரில் அவர் பெரிதளவில் ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொடக்க வீரர் இடத்தில் களமிறங்கிய கேஎல் ராகுல் மூன்றாம் வரிசையிலும், ஷுப்மன் கில் மிடில் ஆர்டரிலும் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷ்ஸ்வி - ராகுல் தான் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடிக்க, கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒருமுனையில் ஜெய்ஸ்வால் விளையாடினால், டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும். அவர் சேவாக்கைப் போன்ற ஒரு வீரர். அவர் விளையாடும் போது, டெஸ்ட் போட்டியை ஒரு பக்கம் கொண்டு வந்து வெற்றிபெறும் அளவுக்கு வேகத்தில் ஆதிக்கம் செலுத்துவார். அவர் மூலம் இந்தியாவுக்கு அங்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
எனவே நான் ஜெய்ஸ்வாலை அங்கேயே வைத்திருப்பேன், அதே நேரத்தில் கேஎல் ராகுல் தனது நேரத்தை எடுத்துக்கொண்டு சரியான தொடக்க பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி விளையாடுகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதம் அடித்த ஒருரு வீரரை நீங்கள் கீழே சென்று விளையாட அழுத்தம் தர கூடாது. இந்த பவுன்சி பிட்ச்களில் அவர் இதற்கு முன்பு ஸ்கோர் செய்துள்ளார், எனவே அவருக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா (கே), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, தனூஷ் கோட்டியான்.
Also Read: Funding To Save Test Cricket