மூன்று ஆண்டுகள்; மூன்று இறுதிப்போட்டிகள் - உச்சத்தில் நியூசிலாந்து அணி!

Updated: Thu, Nov 11 2021 12:31 IST
Image Source: Google

அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். கான்வே 46 ரன்களும் ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தார்கள்.  

இதன்மூலம் கடந்த மூன்று வருடங்களில் மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில்  இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி.

அதன்படி, 2019 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் நூலிழையில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது நியூசிலாந்து அணி. 2021 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து அணி.

தற்போது 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து அணி.

Also Read: T20 World Cup 2021

கடந்த மூன்று வருடங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி தன்னிகரற்ற அணியாக விளங்குகிறது நியூசிலாந்து அணி. இந்த மூன்று போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் கேப்டனாகச் செயல்பட்டு சாதித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை