பாகிஸ்தான் vs இங்கிலாந்து, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Tue, Sep 20 2022 09:48 IST
Pakistan Vs England, 1st T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)

எட்டாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற நாட்டு அணிகளுடன் இறுதிகட்ட போட்டிகளில் மோதுகின்றன.

அந்த வகையில் 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் இன்று இரவு நடக்கிறது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பாகிஸ்தான் vs இங்கிலாந்து
  • இடம் - கராச்சி கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர்களான பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகியோர் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இதனால் அந்த அணி இளம் வீரர்களுடன் களம் இறங்குகிறது. கேப்டன் ஜோஸ் பட்லர் பின்னங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பால் அவதிப்படுவதால் அவர் முதல் 5 போட்டிகளில் விளையாடமாட்டார் . அவருக்கு பதிலாக ஆல்-ரவுண்டரும், துணை கேப்டனுமான மொயீன் அலி கேப்டன் பொறுப்பை ஏற்கிறார்.

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்ற பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் முத்திரை பதித்தார். ஆனால் கேப்டன் பாபர் அசாம் 6 ஆட்டங்களில் 68 ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். இழந்த ஃபார்மை மீட்டு உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் ரன்வேட்டை நடத்தும் வேட்கையுடன் அவர் உள்ளார்.

சமீபத்திய தோல்வியால் எழுந்த கடுமையான விமர்சங்களுக்கு இந்த தொடர் மூலம் விடைகொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதே சமயம் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் சவாலை முறியடித்து வெற்றிக்கனியை பறிக்க போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • பாகிஸ்தான் - 05
  • இங்கிலாந்து - 12
  • முடிவில்லை - 1

உத்தேச அணி 

பாகிஸ்தான் - பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், முகமது ஹாரிஸ், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், ஆசிஃப் அலி, முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ராவூஃப், முகமது ஹஸ்னைன்.
    
இங்கிலாந்து - அலெக்ஸ் ஹேல்ஸ், பில் சால்ட், டேவிட் மாலன், பென் டக்கெட்/வில் ஜாக்ஸ், ஹாரி புரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கர்ரன், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், லூக் வூட்/ஒல்லி ஸ்டோன், ரிச்சர்ட் க்ளீசன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  •      விக்கெட் கீப்பர் - பில் சால்ட், முகமது ஹாரிஸ்
  •      பேட்டர்ஸ் - பாபர் அசாம், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான்
  •      ஆல்-ரவுண்டர்கள் - ஷதாப் கான், மொயீன் அலி, முகமது நவாஸ்
  •      பந்துவீச்சாளர்கள் - நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஆதில் ரஷித்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை