நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, Aug 01 2022 15:31 IST
 Pat Cummins marries his longtime British girlfriend
Image Source: Google

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். தற்போது 29 வயது பேட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 43 டெஸ்டுகள், 73 ஒருநாள், 39 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருட டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

கடந்த 2013ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெக்கி பாஸ்டனைச் சந்தித்தார் பேட் கம்மின்ஸ். பிறகு இருவரும் காதலர்கள் ஆனார்கள். இதையடுத்து கடந்த ஜூன் 2020இல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவித்தார் கம்மின்ஸ். 

இதற்கிடையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இருவரும் ஆண் குழந்தைக்குப் பெற்றோர் ஆனார்கள். இந்நிலையில் 31 வயது பெக்கி பாஸ்டனைக் கடந்த சனிக்கிழமையன்று திருமணம் செய்துள்ள பேட் கம்மின்ஸ், திருமணப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

 

இத்திருமணத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், டிம் பெயின் போன்றோர் கலந்துகொண்டார்கள். தற்போது இவரது திருமணப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை