Cricket australia
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியானது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதனைத்தொடர்ந்து அக்டோபர் மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதனையத்தொடர்ந்து இந்திய அணியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
Related Cricket News on Cricket australia
-
இத்தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளனர் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் எங்கள் பேட்டர்களை தொடர்ந்து அழுத்ததில் வைத்ததுடன் சிறப்பாக விளையாடினார்கள் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
நான் அடித்த சதங்களில் இது தான் எனக்கு முதலிடம் - சரித் அசலங்கா!
நாங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் இந்த பிச்ட் இவ்வாறு செயல்படும் என்பதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் பென் துவார்ஷுயிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் - ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற ஹெட், சதர்லேண்ட்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை டிராவிஸ் ஹெட்டும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அனபெல் சதர்லேண்டும் கைப்பற்றியுள்ளனர். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார். ...
-
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24