ஐபிஎல் 2022: அனைத்து போட்டிகளும் ஒரே இடத்தில் - பிசிசிஐ அதிரடி!

Updated: Mon, Jan 10 2022 16:10 IST
Image Source: Google

பிரபல டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது சீசன் வருகிற ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தாண்டிற்கான தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன.

மேலும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என்ற தகவலும் வெளியானது. 

இதற்கிடையே நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் தொடரை ஒரே இடத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் வீரர்களின் பாதுகாப்பு கருதி 2ஆவது திட்டம் தயாரிக்கப்பட்டு ள்ளது.

போட்டி நடைபெறும் காலக்கட்டத்தில் கரோனா நிலையை கருத்தில் கொண்டு 2ஆவது திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து ஐபிஎல் போட்டிகளையும், மகாராஷ்டிர மாநிலத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அங்குள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், நவீ மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானம் ஆகிய 3 மைதானங்களில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை